தமிழ்க்கடலில் நேற்று விழுந்த மழைத்துளியாக என்னைக் கருதுகிறேன்.
பாவேந்தர் மரபுக் கவிஞர்களைப் போற்றும் வலைப்பூக்கள் நாற்பதை உலவவிட்டுள்ளேன்.
அவையனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.
தமிழறியார்க்குத் தமிழ்க்கவிதை மாண்பினை அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டு அவை அமைக்கப்பட்டன
.இருந்தும் என்னைப் பற்றியும் என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் வகையிலும் ஒரு வலைப்பூவை இதுகாறும் உருவாக்கவில்லை.
பாவேந்தர் நினைவுநாளாகிய இன்று ஏற்ற தருணம் எனக் கருதி இவ் வலைப்பூவை உலவவிட்டுள்ளேன்.
படிப்பதுடன் அமைந்துவிடாது உங்கள் கருத்துகளையும் நல்குங்கள்.நன்றி.
No comments :
Post a Comment