Pages

Saturday, March 15, 2014

2014--தேர்தல்

2014--நம் கடமை
தமிழ் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்
தமிழர் நலன் குறித்தும் புலம்பெயர் தமிழர்க்கு நேரும் இன்னல்கள் குறித்தும் குரல்கொடுத்துவரும் தமிழ் அமைப்புகள் தேர்தல் வரும்பொழுது வாளாவிருந்துவிடுவது முறையா?
ஈழத் தமிழினப் படுகொலை குறித்து ஓயாது முழங்கிவரும் தமிழ் அமைப்புகள் இப்போது த்ங்கள் வலிமையை ஒருங்கிணைத்து நாட்டின் கவனத்தைத் திருப்பவேண்டுமல்லவா?
சில பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.
1)             இனப் படுகொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய தலைவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவேண்டும்.
2)             திருமதி.சோனியாகாந்தியை எதிர்த்துத் திரு.நெடுமாறனை நிறுத்தவேண்டும்.
3)             இதுபோன்றே திருவாளர்கள் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, சல்மான் குர்சித், இராகுல் காந்தி முதலான அனைத்துத் தலைவர்களுக்கும் எதிராக வேட்பாளர்களை நிறுத்தவேண்டும்.
4)             அனைத்து இந்திய அளவில் ஈழத் தமிழினப் படுகொலையை எடுத்துரைக்கவும் இந்திய அரசு இழைத்த கொடுமைகளைப் பரப்புரை செய்யவும் இதனைக் காட்டிலும் வேறு வழி இருக்கமுடியாது.
5)             இது போன்றே இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில்
தமிழின உரிமை முன்னணி என்னும் பெயரில் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து இந்திய அளவில்
பரப்புரை நிகழ்த்த இதனைக் காட்டிலும் நல்ல வாய்ப்பான நேரமும் சூழலும் கிட்டாது.
மக்களாட்சிமுறை வழங்கும் தேர்தல் என்னும் பொன்னான வாய்ப்புதான் மக்களை அணுகவும் கருத்தைப் பரப்பவும் ஏற்றது.

ஒன்றுபடுக! வினையாற்றுக!வெல்க!